யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் விபரங்களை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அந்த ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ன கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் குறித்த மாணவர்கள் உயிரிழக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன அவர்கள் வௌவேறு நேரங்களில் வௌவேறு முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் படையினரால் விடுவிக்கப் பட்டமைக்கான சான்றுகள் எவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்குள் 60பல்கலைக்கழக மாணவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
