தபால் மூல வாக்களிப்பின் போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதிலும் 23 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகள் அமைப்பின் சிவில் மற்றும் அரசியல் விவகார செயலாளர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை காண்பிக்குமாறு சில வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Categories: செய்திகள்
