Home > செய்திகள் > சந்திரகாந்தனின் கட்சிக்குள் பிளவா? மறுக்கிறார் பேச்சாளர்!

சந்திரகாந்தனின் கட்சிக்குள் பிளவா? மறுக்கிறார் பேச்சாளர்!

சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் எவ்வித பிளவுகளும் ஏற்படவில்லை என கட்சியின் ஊடகப்பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது கட்சி பூரண ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இந்த தீர்மானம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் கட்சிக்குள் நிலவவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் காரணமாக கட்சிகள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள போதிலும் பல உறுப்பினர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதனையே விரும்புகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு;ள்ளது அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவினைப் போன்றே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலும் பிளவுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறித்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

  1. No comments yet.
  1. No trackbacks yet.