Home > செய்திகள் > கண்முன் இடம்பெறும் திட்டமிட்ட குழிபறிக்கும் செயற்பாடுகளை கண்டும் மௌனமாக இருப்பது நாம் எமது மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா???

கண்முன் இடம்பெறும் திட்டமிட்ட குழிபறிக்கும் செயற்பாடுகளை கண்டும் மௌனமாக இருப்பது நாம் எமது மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா???

சில புதிய அனுபவமில்லாத திடீர் அரசியல்வாதிகள் முன்ஜோசனைகளற்ற விதத்தில் செயற்படுவதானது, அவர்களையும் ஒரு மனிதனாக மதித்து அவர்களுக்கு வாக்களித்த மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவதாகவே அமைந்துவிடுகிறது. மட்டக்களப்பு மாநகரசபைக்குள் நிலவிவந்த பிரதிமேயர் பிணக்கில் முரண்பட்டுக் கொண்டு தனக்கு பிரதிமேயர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று, சபையின் நடவடிக்கைகளை முற்றாக தவிர்த்து, ஒரு பெரிய அக்ஷன் கிங் ஆக உருப்பெறுவதற்கு அதாவது, நாக்கிளியான் நாகபாம்பிற்கு ஆட வெளிக்கிட்ட கதையாக அரசியல் பண்ணுவதற்கு தயாராக இருந்த “தவராசா” என்பவர்., தமிழ்மக்களை அவர்களின் ஏழ்மையை விலைபேசி ஒரு முஸ்லிம் மந்திரியை, “இனி தமிழர்களுடைய இன்னோரன்ன பிரச்சனைகளை இவர்தான் தீர்த்துவைக்கப்போகிறார்” என்ற தோறணையில் வரலாற்றிலே எவனும் செய்யத்துணியாத ஒரு கீழ்த்தரமான கூட்டிக்கொடுப்பது போன்ற செயலை செய்திருக்கின்றார்.

செல்வந்தனாக வேண்டுமா இல்லை கோடீஸ்வரனாக வேண்டுமா அதற்கு திறமையான திட்டமிடல், திறமையான உழைப்பு இன்றியமையாததாகின்றது, கஸ்டப்பட்டுத்தான் முன்னுக்குவர வேண்டும், அப்படி கஸ்டப்படாமல் ஏசி றூமும், ஏசி வாகனமும், சும்மா பந்தாவாக இராணுவ பொலிஸ் பாதுகாப்பும் கிடைக்கவேண்டும் என்று பெரிய எடுப்பு எடுத்தால் அதற்கு இந்த புனிதமான அரசியலையோ, மக்கள் வழங்கிய ஆணைகளையோ கேவலமான முறையில் பணயம்வைக்கக்கூடாது.

“எனக்கு பிரதிமேயர் பதவி வழங்கப்படவில்லை அதனால்தான் நான் இப்படிப்பட்ட துரோகத்தனமான முட்டாள்த்தனமான முடிவினை எடுத்தேன்” என்று மதிகெட்ட “வடித்தவா” எப்படி சொல்லமுடியும்??? கொஞ்சம்கூட முன்ஜோசனையில்லாத முறையில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த முடிவின் விளைவாக மட்டக்களப்பு முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்திற்குள் பாரியழவிலான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.,

அந்த வகையில் மட்டு மாநகரசபை உறுப்பினராக இருக்கும் தவராசா அந்த முச்சக்கரவண்டிகள் சாரதிகளின் தலைவராக இருக்கமுடியாதென்றும் ஒருசாரார் போர்க்கொடி தூக்குகின்றனர். முச்சக்கரவண்டிகள் தரிப்பிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் பல கணக்கில் சேர்க்கப்படாத பெருந்தொகைப்பணம் ஒவ்வொரு புதிய முச்சக்கரவண்டி சாரதிகளிடமிருந்தும் வசூலிக்கப்பட்டு வருகின்றது,

ஆனால் அப்படிப்பட்ட பெருந்தொகைப்பணம் நேரடியாக தவராசாவின் கரங்களுக்கே செல்கிறது. இப்படி இன்னோரன்ன பணமோசடிகளுடன் தொடர்புபட்ட தலமைத்துவத்திற்கு மட்டு நகர மத்தியில் “முச்சக்கரவண்டிகள் சங்கத்தின்” காரியாலயத்திற்கு மட்டு மாநகரசபை இடம் ஒதுக்கிக் கொடுத்திருப்பதானது தவராசா அங்கு வீற்றிருந்து தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கும், மேற்கூறப்பட்ட முட்டாள்த்தனமான முடிவுகளை அரங்கேற்றுவதற்கும் வசதியாக அமையும் என்று கருதப்படுகின்றது.

தனது தனிப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்களுக்கு ஆட்டோ சங்க காரியாலயத்தை பயன்படுத்தும் பட்ஷத்தில், பெருமளவிலான பாதிப்புக்களை ஏனைய சாரதிகள் எதிர்கொள்ள நேரிடுமென செய்திகள் வெளியாகியுள்ளன, அதனால் மட்டு மாநகரசபை தனது முடிவினை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

அரசியல் தொடர்பில்லாத ஆட்டோ சங்கத்திற்கு உதவுவது சிறந்தது,,,,,

தொடரும்…………………….


  1. No comments yet.
  1. No trackbacks yet.