ரணீலின் கைக்கூலி பப்டிஸ் அவர்களுக்கு எழுதுகிறோம் ஒரு கடிதம்….

சீரான முறையில் ஒரே தலமைத்துவத்தின் கீழ் பற்பல வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளை இஸ்தம்பிக்க வைக்கும், குழப்பியடிக்கும் முகமாக சில உறுப்பினர்கள் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் பொதுமக்களின் புகார்களாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எமது இலங்கைத்திருநாட்டின் அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் “மஹிந்தவின் சிந்தனைகள்” என்ற உன்னதமான சிந்தனைகளை தவிடுபொடியாக்கும் பாரிய முயற்சியில் பல எதிர்க்கட்சிகள் மட்டு மாநகர சபைக்குள் சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றும் அதன் பங்காளி கட்சிகளின் பிரதிநிதியாக, மாநகரசபையின் கூட்டுக்குடும்ப நிருவாகத்தினை குழப்பி திசை திருப்புவதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவர்தான் பப்டிஸ் பர்னாந்து என்பது சில துல்லியமான தகவல்களின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. மட்டு மாநகர சபைக்குள் தாழ்த்தப்பட்ட சாதி, உயர் சாதி என்ற விஷத்தினை பரவலாக விதைத்து, உறுப்பினர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்குமிடையில் நிலவிவந்த இறுக்கமான அன்னியொன்னியத்தை சிதைத்து, நிரந்தரமான பகையினை ஏற்படுத்தி அதில் சுயலாபமடைவதற்கு மெகா பிளான் போட்டிருக்கிறார் பப்டிஸ் அவர்கள். அவருக்கு நாங்கள் இந்த பகிரங்கமான மடலினை எழுதுகிறோம்.
Dear Hon!
தங்களால் வடிவமைக்கப்பட்டு பலருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட “மொட்டை” கடிதத்தினை நாங்களும் வாசித்திருந்தோம். பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. பூனையின் கால் புலியறியும் என்பதுபோல, இத்துடன் தங்களின் புறம்போக்குத்தனமான, சின்னப்பிள்ளைத்தனமான மொட்டைக் கடிதம் எழுதும் படலத்தினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா?
உள்ளதை உள்ளபடி உண்மைகளை எழுதும் எமக்கு மடியில் கனமுமில்லை அதனால் எவருக்கும் பயமுமில்லை. நீங்கள் ஒரு சிறந்த, தன்னலமற்ற, துவேசமில்லாத அரசியல்வாதியாக தோற்றம் பெற்றிருந்தால் உங்களைப்பற்றி ஏன் மற்றைய இணையத்தளங்களில் பந்தி பந்தியாக எழுதித்தள்ளுகிறார்கள்? நெருப்பு இல்லாமல் எப்படி புகை வரும்? மாறாக பட்டி தொட்டி முதல் உங்களுக்கு பூப்போட்டல்லவா கும்பிடுவார்கள்.
முதலில் உங்களிடமிருக்கின்ற வறட்டு கௌரவத்தினை முற்றாக ஒதுக்கிவிடுங்கள், மற்றவர்களின் மனங்கள் புண்படுமளவிற்கு கதைத்துவிட்டு ஜோசிப்பதை விட, நன்கு நிதானமாக ஜோசித்துவிட்டு கதையுங்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் நாங்கள் முன்பொருதடவை உங்களுக்கு இப்படியான செயற்பாடுகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சந்தர்ப்பம் வழங்கியிருந்தோம், ஆனால் நீங்கள் திருந்தவும் இல்லை மனம் வருந்தவுமில்லை. எவராக இருந்தாலும் நடந்துவந்த பாதைதன்னை திரும்பிப்பார்க்க வேண்டும், அப்படி திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு கசப்பான அருவருப்பான வரலாறுகளைக் கொண்டிருக்கும் நீங்கள், உங்களுடைய எஜமான் ரணிலின் கயிறுகளை விழுங்கிக் கொண்டு எமது மாநகரசபையைக் குழப்பியடிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.
பணத்தைக்காட்டி எமது மண்ணின் மைந்தர்களை விலைகொடுத்து வாங்க முடியாது.
உங்களுடைய வேலை என்னவோ நீங்கள் அதைமட்டும் பாருங்கள், தேவையில்லாத வேலைத்திட்டங்களில், அதுவும் அரசிற்கு எதிரான வேலைத்திட்டங்களில் இறங்கி மூக்குடைபட வேண்டாம், மீண்டும் மீண்டும் அந்த மொட்டைக்கடித வேலைகளிலோ, உறுப்பினர்களை, ஊழியர்களை மாநகரசபை நிருவாகத்திற்கு எதிராக திசைதிருப்புவதிலோ, அல்லது ஆண்டான் அடிமை போக்கிலோ குளப்பத்தை ஏற்படுத்துவீர்களாக இருக்குமேயானால், தினம் தினம் உங்களைப்பற்றிய, உங்கள் குடும்பத்தைப்பற்றிய, தங்களுடைய வெளிநாட்டில் வசிக்கும் மகள் பற்றிய, தங்களுடைய கடந்தகால டமெஜ் ஆகிய அரசியல் பற்றிய பல தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இணையத்தளங்களின் செய்திகளை நாங்கள் பிரதி பண்ணி தினமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கவேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதனை மிகவும் வேதனையுடன் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தொடரும்………….
