“நிருவாகம்” என்றால் என்ன? என்று தெரியாத பிள்ளையான் போன்ற, மழைக்குக்கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கியிருக்காத வடிகட்டிய முட்டாள்களால் மாகாணசபையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரிவரி தொடக்கம் உயர்தரம் வரை ஏதாவது ஒரு சிறந்த பாடசாலையில் கல்விகற்றிருந்தால் ஒழுக்கம் என்பது இரத்தத்துடன் கலந்திருக்கும். அவ்வாறே ஆரம்பம் முதல் தற்பொழுது வரை எந்தவொரு தலமைத்துவத்திற்கு கீழாவது விசுவாசமாக, அத்தலமைத்துவத்தின் பயிற்சிப்பாசறையில் நிலைத்து நின்றிருந்தால் “நிருவாகம்” என்றால் என்ன என்பது ஓரளவிற்கேனும் விழங்கியிருக்கும், ஆக மொத்தத்தில் ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு பாடசாலைக் கல்வி அடியோடு கிடையாது, நிருவாகம் என்றால் எப்படி நடத்துவது என்று தெரிந்து கொள்வதற்கு எந்தவொரு தலைவனுக்குக்கீழோ, அல்லது தலமைத்துவத்திற்குக்கீழோ விசுவாசமாக நிலைத்து நின்றதும் கிடையாது.
மேற்கூறப்பட்ட இரு பிரதான விடயங்கள் இம்மியளவும் மருந்துக்குக்கூட கிடையாத பிள்ளையானால் தொடர்ந்து மாகாணசபையை இழுத்துக்கொண்டு செல்லமுடியுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அதிகாரத்துஸ்பிரயோகங்கள், பணமோசடிகள், தரமில்லாத கொந்திராத்து வேலைகள்(வீதிகள்,கட்டிடங்கள்) என பிள்ளையானின் சகாக்களால் பொதுமக்களுக்கு செய்யப்படும் துரோகங்கள் எல்லைகளைக்கடந்து சென்று கொண்டிருக்கிறது. பாரளுமன்ற கதிரைகளை மாத்திரம் இலக்குவைத்து பிள்ளையானின் சகாக்களால் மேற்கொள்ளப்படும் “நடிகர்திலக” நாடகங்களால், அதாவது அதிகார துஸ்பிரயோகங்களால் பொதுமக்கள் மாத்திரமல்ல, அரச ஊளியர்கள் பலரும் விசனமடைந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் எமது கிழக்கு தமிழின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பது எமது கனவுகளில் ஒன்று, என்றாலும், பஞ்சம் பிழைக்க வந்தவர்களையும், பொதுமக்களை சுரண்டித்தின்னும் களவாணிகளையும், காறுக்கும் பேருக்கும் ஆசைக்கும் இஸ்டப்பட்டு ஏசி றூமுக்குள் மாதருடன் மல்லுக்கட்டும் கயவர்களையும், அதிகாரங்கள் கைகளில் என்றவுடன் அதை சரிவர மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்த திராணியில்லாத மதிகெட்ட, அதிகார துஸ்பிரயோகம் செய்து கொண்டிருக்கும் “பிரசாந்தன்” போன்ற திடீர் மற்றும் தற்காலிக ரௌடிகளை எந்தவொரு காலகட்டத்திலும் பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்போவதில்லை. ஆரயம்பதியில் தமிழுக்கும் முஸ்லிமுக்கும் இடையில் ஏற்பட்ட கள்ளக்காதலின் “காதல் பரிசு” தான் ரௌடி பிரசாந்தன்.
காலத்திற்கு காலம் தமிழ் – முஸ்லிம்களுக்கிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபமடைந்துகொண்டு ஒருகூட்டம் இருந்தது. தற்பொழுது அதேபோல முஸ்லிம் – தமிழ் மக்களுக்கிடையே வீணான பிளவுகளை ஏற்படுத்தி அதை தனது கன்னி அரசியல் பிரவேசமாக்குவதற்கு பிரசாந்தன் பாரிய திட்டங்கள் திரைமறைவில் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வந்து செல்கின்றன.
சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக, ஒருவித அடக்குமுறைக்குள் வாழ்ந்துவந்த எமது மக்கள், இனியும் அதேபோன்ற நிருவாகம் ஒன்றினை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். சென்ற மாகாணசபைத்தேர்தலில் பூ.பிரசாந்தன் என்ற ரௌடிக்கு எமது மக்கள் சிறந்த பாடம் புகட்டியது ஞாபகம் இல்லையோ? மண்குதிரையை நம்பி பிள்ளையான் பரலோகம் செல்ல எத்தணிக்கிறார். அவரோடிருந்த திடமான, ஒழுக்கமான குதிரைகளையெல்லாம் விரட்டியடித்துவிட்டு, போயும் போய் இந்த கோமாளி நடிகனை நம்பி அரசியல் நடாத்துவதற்கு திட்டமிட்டிருப்பதானது அவருடைய பிணக்கிடங்கை அவராகவே தோண்டிக்கொண்டிருக்கிறார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. மட்டு மாநகர எல்லைக்குள் ஏதாவது நிகழ்வுகள் இடம்பெறவேண்டுமாயின் அதன் முழு விபரங்களும் மாநகரசபை நிருவாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும் என்ற கட்டளைச்சட்டம் பாமர மக்களுக்குக்கூட தெரிந்த விடயம். மாநகரசபை நிருவாகத்திற்கு தெரியாமல் சபை ஊழியர்களையும், அதன் வளங்களையும் பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வெறும் கண்துடைப்பிற்காக கிழக்கின் முளக்கம் என்று சபை முதல்வருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. கிழக்கின் முளக்கம் என்ற களியாட்ட நிகழ்வில் போடப்பட்டிருந்த கடைகளுக்கு வரி எடுப்பதில்லை என்று சொல்லிவிட்டு, அங்கு அந்த நிகழ்வில் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் பிரசாந்தனால் அறவிடப்பட்டிருக்கிறது. இந்த பண மோசடியில் பிள்ளையானுக்கும் பாரியளவிலான பங்கு செல்கிறதாம். இந்த நிலையில் மட்டு மாநகரசபை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சில புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கிடையில் :-
மட்டு மாநகரசபையின் பிரதம கணக்காளர் திருமதி.சிவராஜா தொடர்பான பண மோசடிகள், மட்டு மாநகரசபையை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்பதற்கு முன், மாநகரசபையுடன் இணைந்து செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான வங்கிக்கணக்கறிக்கைகளில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதாகவும், இப்பாரிய பண மோசடிகள் கணக்காளர் திருமதி.சிவராஜாவின் தலமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அண்மைக்காலங்களில் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அவர் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், அவருடைய மத சம்பளம், மற்றும் அவருடைய அசையும் அசையா சொத்துக்கள் முற்றுகையிடப்பட இருப்பதாகவும் வெளியாகிய தகவல்களையடுத்து, எமது எரிமலை இணையத்தளம் இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனவே திருமதி.சிவராஜா தொடர்பான முழுவிபரங்களும் மிக விரைவில் வெளியாகும்.
கபிலன்
