ஆளும் – எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more…
தபால் மூல வாக்களிப்பின் போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதிலும் 23 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகள் அமைப்பின் சிவில் மற்றும் அரசியல் விவகார செயலாளர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை காண்பிக்குமாறு சில வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் Read more…
கருத்துக் கணிப்பில் மஹிந்த ராஜபக்ச முன்னிலை!மஹிந்த ராஜபக்ஷவூக்கு 62வீதம் சரத் பொன்சேகாவூக்ககு 28வீதம்!
அரசுக்கு எதிரான ஊடகங்கள் என்னதான் மக்களின் மனதை மாற்ற முனைந்தாலும், பெரும்பான்மையான மக்கள் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்குவார்கள் என்பதை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன. கடந்த வாரம், களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமான மக்களின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 28 வீதமான மக்களின் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. Read more…
சந்திரகாந்தனின் கட்சிக்குள் பிளவா? மறுக்கிறார் பேச்சாளர்!
சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் எவ்வித பிளவுகளும் ஏற்படவில்லை என கட்சியின் ஊடகப்பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது கட்சி பூரண ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இந்த தீர்மானம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் கட்சிக்குள் நிலவவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் காரணமாக கட்சிகள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள போதிலும் பல உறுப்பினர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதனையே விரும்புகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி Read more…
யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் விபரங்களை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வெளியிட வேண்டும் என அந்த ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ன கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் குறித்த மாணவர்கள் உயிரிழக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன அவர்கள் வௌவேறு நேரங்களில் வௌவேறு முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more…
முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே
அடுத்து முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே. இந்தக் கேள்விக்கு அலரி மாளிகையில் Read more…
வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள்கூட்டம் உன் பின்னால் – 43 வது அகவையில் எமது மண்ணின் மைந்தன், ஏழைகளின் “தளபதி” கருணா அம்மான்.

வீறுகொண்டு நீ எழுந்தால் மக்கள் கூட்டம் உன் பின்னால்
பெயரைச் சொன்னால் மேல்கள் சிலிர்க்கும் ஊரே Read more…
கண்முன் இடம்பெறும் திட்டமிட்ட குழிபறிக்கும் செயற்பாடுகளை கண்டும் மௌனமாக இருப்பது நாம் எமது மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா???
சில புதிய அனுபவமில்லாத திடீர் அரசியல்வாதிகள் முன்ஜோசனைகளற்ற விதத்தில் செயற்படுவதானது, அவர்களையும் ஒரு மனிதனாக மதித்து அவர்களுக்கு வாக்களித்த மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவதாகவே அமைந்துவிடுகிறது. மட்டக்களப்பு மாநகரசபைக்குள் நிலவிவந்த பிரதிமேயர் பிணக்கில் Read more…
ரணீலின் கைக்கூலி பப்டிஸ் அவர்களுக்கு எழுதுகிறோம் ஒரு கடிதம்….

சீரான முறையில் ஒரே தலமைத்துவத்தின் கீழ் பற்பல வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளை இஸ்தம்பிக்க வைக்கும், குழப்பியடிக்கும் முகமாக சில உறுப்பினர்கள் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் பொதுமக்களின் Read more…
“நிருவாகம்” என்றால் என்ன? என்று தெரியாத பிள்ளையான் போன்ற, மழைக்குக்கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கியிருக்காத வடிகட்டிய முட்டாள்களால் மாகாணசபையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரிவரி தொடக்கம் உயர்தரம் வரை ஏதாவது ஒரு சிறந்த பாடசாலையில் கல்விகற்றிருந்தால் ஒழுக்கம் என்பது இரத்தத்துடன் கலந்திருக்கும். அவ்வாறே ஆரம்பம் முதல் தற்பொழுது வரை எந்தவொரு தலமைத்துவத்திற்கு கீழாவது விசுவாசமாக, Read more…
